நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த நெசவாளரின் மகள் : அரசுப் பள்ளி மாணவி அசத்தல்!!

2 November 2020, 11:08 am
Weavers daughter - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே நெசவு தொழிலாளி மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் முடுக்கன்துறை கிராமத்தை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி ராஜசேகரன் இவருக்கு சம்சிகா, கீதாஞ்சலி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இவருடைய மகள் சம்சிகா தொட்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இ பாக்ஸ் நிறுவனத்தின் மூலம் நீட் பயிற்சியில் பங்கேற்று நீட் தேர்வு எழுதியுள்ளார்.

பின்னர் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சம்சிகா 284 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி மாணவி சம்சிகா நீட் தேர்வில் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது அரசு பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.

Views: - 25

0

0