திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்… எதிர்வரும் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி ; பிரேமலதா வாக்குசேகரிப்பு

Author: Babu Lakshmanan
10 April 2024, 9:58 am
Quick Share

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றப்படும் சட்ட ஒழுங்கு சீரமைக்கப்படும் என கூறி மன்னார்குடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குசேகரித்தார்

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவனேசனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: பதில் சொல்லுங்க மோடி… பட்டியல் போட்டு சவால் விட்ட CM ஸ்டாலின்… கேரண்டி தர தயாரா..?

அப்போது, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டு பின்பு பேசியதாவது :- ஹரித்ரா நதி தெப்பக்குளம் சீர் அமைத்து தரப்படும். மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் மிகவும் காத்திருக்கின்ற ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டி தரப்படும். குப்பை கிடங்கு போதிய வசதி இல்லாமல் இருந்து வருகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

போக்குவரத்து நெரிசலை பாதுகாக்கும் வகையில் ரிங் ரோடு அமைத்து தரப்படும். அதுவும் விவசாயத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பாமணியில் இயங்கி வரும் உர ஆலை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றது. அதற்கு தீர்வு அளித்து ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும் படிக்க: சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். டிஜிட்டல் நூலகம் கட்டித் தரப்படும். அறநிலைத்துறையில் பல்வேறுகள் குறைபாடுகள் இருந்து ஒரு வருவதால் அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட்டு, அறநிலைத்திற்கான கோவில் நிலங்களை மீட்டு தரப்படும். புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்னர், உடனடியாக அம்மா உணவகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பெண்களை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றப்படும். சட்ட ஒழுங்கு சீரமைக்கப்படும். தமிழ்நாட்டில் கஞ்சா தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியிலிருந்து திமுக ஆட்சியை வெளியேற்ற வேண்டும். அதேபோல, வரும் ஆட்சி மக்களாட்சி பெண்களுக்கான ஆட்சி என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் துணை முதல்வராக மு.க ஸ்டாலின் இருந்த போது, மீத்தேன் ஷேல், உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்துட்டு, அது நடைமுறைப்படுத்தியது முக ஸ்டாலின் ஆட்சி. அதை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்தார்.

தற்பொழுது தொழில் துறை அமைச்சராக இருக்கக்கூடிய டிஆர்பி ராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பழனி மாணிக்கம், அதேபோல டிஆர் பாலு மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தார்கள். அந்த வாக்குறுதிகள் எல்லாம் செயலற்று போய்விட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்திற்கும், முரசு சின்னத்திற்குமாக நான் தொடர்ந்து வாக்கு சேகரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறேன். 40 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். மறைந்த கேப்டன் எங்கும் போகவில்லை. ஒவ்வொரு தொண்டர்களின் மனதில் இருந்து வருகிறார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது அவருடைய கடமையை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நிறைவேற்ற வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு கொண்டு வந்தார். அம்மா அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். ஆனால் புரட்சி கலைஞர் தினம் ஒரு மக்களுக்காக உணவு அளித்து வந்தவர் என்பதை எல்லோரும் உணர்வீர்கள். கேப்டன் இறந்த பிறகு அதிகமாக பெண்களை விட ஆண்கள் தான் இரண்டு நாட்களாக டிவி பார்த்துக் கொண்டே அழுதார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த எங்கள் தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கேப்டன் களத்தில் நின்று வாக்கு சேகரிக்கிறார் என்று நினைத்துக் கொண்டு, தொண்டர்கள் அனைவரும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். துளசி வாசம் மாறும், ஆனால் தவசி வாசம் எப்போதுமே மாறாது.

எனது மனதில் எத்தனை சோகம் இருந்தாலும், எனது மிகப்பெரிய சோகம் என் கணவனை இழந்த சோகம் தான். அதனால் என் மக்களிடம் என் தொண்டர்களிடம் நான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். அனைவரும் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அன்பு தம்பி சிவநேசனுக்கு கட்டாயம் முரசு சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம், என்றார் . பிரேமலதா விஜயகாந்த் வருவதற்கு முன்பாக கட்சி தொண்டர்கள் பெண்கள் இங்கு பாடிய பாடல்களுக்கு ஏற்ப குத்தாட்டம் போட்டனர்.

Views: - 259

0

0