கச்சத்தீவு மட்டுமல்ல… முக்கியமான உரிமையையும் தாரை வார்த்திடுச்சு இந்த திமுக – காங்கிரஸ் ; மெயின் பாயிண்ட்டை பிடித்த பிரேமலதா..!!

Author: Babu Lakshmanan
3 April 2024, 4:55 pm

கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் , முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் இ. ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: படுகொலையில் முடிந்த டிவி விவாத நிகழ்ச்சி… பட்டப்பகலில் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை ; தாய், மகன் எஸ்கேப்..!!!

இதனை அடுத்து, அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். கூட்டணி கட்சியினர் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் : கச்சத்தீவு பிரச்சனை மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கலைஞர் மற்றும் இந்திரா காந்தி இணைந்து நமது உரிமைகளை தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள். அன்றிலிருந்து ஆரம்பிப்பது தான், மீனவர்களின் பிரச்சனை. திமுக, காங்கிரஸ் கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணம் திமுக காங்கிரஸ் தான்.‌ எல்லா பிரச்சனைக்கும் திமுக மற்றும் காங்கிரஸ்தான். இந்த தேர்தலில் இந்த கூட்டணியை மகத்தான வெற்றி பெற வையுங்கள்.

19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் அன்று காலையிலே சென்று வாக்களித்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் வாக்கு கள்ள ஓட்டாக மாறிவிடும். இன்று திமுக ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் வைத்து சட்ட ஒழுங்கு சீர்கேடு உருவாக்கி எல்லா தொகுதியிலும் ஜெயிக்க அனைத்து வன்முறைகளையும், கட்டவிழ்த்துவிட விட தயாராக இருக்கிறார்கள். இளைஞர் பணிக்கு ஏதாவது உண்டா , இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் படிக்க: பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார மேற்கொண்ட நிலையில் ஏராளமான தேமுதிக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!