நடு ராத்திரியில் பேருந்தை நிறுத்தி திமுக நிர்வாகிகள் அலப்பறை : ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
26 July 2021, 12:26 pm
dmk karur - - updatenews360
Quick Share

கரூரில் நடு இரவில் அரசுப் பேருந்தை வழிமறித்து போதையில் அரிவாளுடன் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மிரட்டி அமைச்சரின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருமாநிலையூர் – லைட் ஹவுஸ் கார்னர் இடையே உள்ள புதிய அமராவதி பாலத்தில் கோவையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த பாலத்தின் மீது பேருந்து வந்த போது, திடீரென போதை ஆசாமி ஒருவர் பேருந்தை வழிமறித்தார். கையில் அரிவாள் வைத்திருந்த அந்த நபர், ‘டேய் வண்டிய நிறுத்துடா, என் அரிவாளுக்கு பதில் சொல்லி விட்டு செல்,’ என்று கூறி விட்டு, ஓட்டுநரை வெட்ட முற்பட்டுள்ளார்.

போதை தலைக்கு ஏறிய அந்த இளைஞரை, சக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து துரத்தியதால் அவர் அங்கிருந்து அரிவாளுடன் ஓடிவிட்டார். அப்போது, அவருடன் வந்த மற்றொருவர் வசமாக மாட்டிக் கொள்ள அவரை அடித்து துவைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை பார்த்த மற்ற இளைஞர்கள் நான்கு நபர்கள் நாங்கள் அப்படித்தான் காண்பிப்போம் என்றும், அதற்கு ஏன் அடிக்கிறாய் என்று கூறி, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தாக்க முயற்சித்தனர். பஞ்சாயத்து செய்ய வந்த நபர்கள் தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அவர்களது புகைப்படம் ஒட்டிய வாகனத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 361

0

0