கோவை சம்பவத்தை இனி சிலிண்டர் வெடிப்பு என திமுக கூற முடியாது : அண்ணாமலை ட்விட்டரில் கிடுக்குப்பிடி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2022, 7:46 pm

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.

இந்த வழக்கில் முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கோவை சம்பவத்தை சிலிண்டர் வெடிப்பு என திமுக அரசு கூற முடியாது.

என்ஐஏ இந்த சம்பவத்தை “வெடிகுண்டு வெடிப்பு வழக்கு” என்று கூறியுள்ளது. கடவுளின் கருணையால் கோவை மக்கள் காப்பாற்றப்பட்டனர். என தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!