வெற்றி வாய்ப்பு பிரகாசம்… வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு திமுக வேட்பாளர் கனிமொழி நம்பிக்கை..!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 1:25 pm

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது என்று தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தனது வேட்பு மனுவினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலுருமான லட்சுமிபதியிடம் கனிமொழி அளித்தார். உடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜூவன், மேயர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது :- தூத்துக்குடி மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. தொகுதியில் எங்கு சென்றாலும் மக்கள் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு அளித்து வரும் சூழ்நிலை உள்ளது.

இன்று காலை தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டபோது மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது, எனக் கூறினார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!