வாக்குச்சாவடிகள் மாறி மாறி வாக்களித்த திமுக வேட்பாளர் : 2 முறை வாக்களித்ததாக வேட்பாளர்கள் புகார்

Author: kavin kumar
19 February 2022, 7:31 pm

திருச்சி : திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி 56 வதுவார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி தனது வாக்கினை பதிவு செய்வதற்கு பதிலாக வேட்பாளரின் பெயரில் உள்ள மற்றொரு மஞ்சுளா தேவியின் வாக்குகளை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து உடனே தவறாக வாக்கு அளித்து விட்டோம் என்று மீண்டும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இதனை அறிந்த தேமுதிக மற்றும் சுயேச்சைக் வேட்பாளர்களும் அதிகாரிகள் இடத்தில் இதுபோன்று வாக்களிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்களிக்க வந்த மஞ்சுளாதேவி தனது வாக்கினை வேட்பாளர் பதிவுத் உள்ளது தெரிந்தவுடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயச்சை வேட்பாளர்களும் ஒன்றிணைந்து வேட்பாளர் கள்ள ஓட்டு பதிவு செய்ததற்கு அவர் மீது உடனடியாக நடிகை எடுக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த திமுக வேட்பாளர்கள் மற்ற கட்சியின் முதல் கும்பலாக பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்திற்கு திரண்டு வந்து அவர்களும் காவல்துறையினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்குச்சாவடி முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின்பு அனைவரும் அமைதியாக கலைந்து சென்று ஆங்காங்கே நின்றனர்.

தவறாக வாக்கு செலுத்தினாலும் மீண்டும் அவருடைய வாக்கு செலுத்தியது கள்ள ஓட்டு தான் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் சுயேட்சை மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்கள் காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். வேட்பாளர்களின் தர்ணாவினால் சில மணி நேரம் வாக்குச்சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!