திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

16 January 2021, 9:00 am
Quick Share

வேலூர் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் மட்டும் இருமுறை திடீர் தீடீரென ஏற்பட்ட உடல் ரீதியிலான தொந்தரவுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், சிகிச்சை பிறகு வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான துரைமுருகன் மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்படுவது திமுக தலைவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.