வரும் 14ம் தேதி தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் திமுக குழு கூட்டம் : டி.ஆர். பாலு அறிவிப்பு

Author: Babu
12 October 2020, 1:37 pm
AnnaArivalayam
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவின் கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் திமுக குழுவின் கூட்டம் வரும் 14-ம் தேதி நடக்க இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் டி,ஆர். பாலு அறிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள அரங்கில் நடக்கும். இதில், தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு, துணைப் பொதுச்செயலாளா்கள் சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூா் செல்வராஜ், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, கொள்கை பரப்புச் செயலாளா் திருச்சி சிவா, செய்தித் தொடா்புச் செயலாளா் டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியா் அ.ராமசாமி ஆகிய 8 போ் இடம்பிடித்துள்ளனர்.

Views: - 37

0

0