வீட்டு பணிப்பெண்ணை விடாமல் துரத்திய திமுக பிரமுகர்.. கொலை மிரட்டல் கொடுத்து பாலியல் தொல்லை : பகீர் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
12 செப்டம்பர் 2024, 4:39 மணி
DMK Executive Sex Torture
Quick Share

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் துன்புறுத்தல் செய்த திமுக பிரமுகர் மீது, கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் புகார் அளித்தால், குடும்பத்தையே கொன்று விடுவதாக மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவை வடவள்ளி மகாராணி அவனியூவில் வசிப்பவர் சுதா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான சுதா, கடந்த ஆறு வருடங்களாக வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்ற திமுக பிரமுகர் வீட்டில் வேலை செய்துள்ளார்.

தனது குடும்பச் சூழல் காரணமாக, காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை, கதிரேசன் வீட்டில் வீட்டு வேலை, சமையல், வீடுகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.

Maid worker DMK - Update News 360

இதனிடையே கடந்த இரண்டரை வருடங்களாக, கதிரேசன், தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக கண்ணீருடன் தெரிவித்தார் சுதா.

இது குறித்து யாரிடமும் சொன்னால், குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறுகிறார். இப் பிரச்சனை தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார்.

மேலும் படிக்க: கேரள சினிமாத்துறையை அதிர வைத்த செக்ஸ் டார்ச்சர் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!

திமுக பிரமுகரின் பாலியல் சீண்டல்கள் குறித்து அவரது மனைவியிடம் எடுத்துக் கூறியும், தங்களையே அவர்கள் மிரட்டுவதாக புலம்பினார்.

தானும் கதிரேசனும் ஒன்றாக அதிமுகவில் இருந்ததாகவும், தற்சமயம் திமுகவில் இருப்பதாக சுதாவின் கணவர் மணிகண்டன் தெரிவித்தார். தன் மனைவிக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 218

    0

    0