“உதயநிதிக்காக சொந்த நிதியெல்லாம் போச்சே“ : கடுப்பில் சோழ மண்டல திமுக நிர்வாகிகள்!!

27 November 2020, 4:53 pm
Udhaya - Updatenews360
Quick Share

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் திமுகவினர் அரியாசணத்தில் ஏற தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி வருகிறது. திரையில் நட்சத்திரமாக முகத்தை காண்பித்து , தற்போது வாரிசு அரசியல் பட்டியலில் சேர்ந்திருக்கும் உதயநிதி, தந்தையை போலவே பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

நமக்கு நாமே திட்டம் மூலம் தந்தை மக்களை சந்தித்ததை போலவே, விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரம் மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். விவசாயிகள், மீனவர்கள் குறி வைத்து டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

என்னதான் இது நல்ல திட்டம் என்றாலும், உதயநிதிக்காக நிதியை வாரி இறைத்து திமுக நிர்வாகிகள் தற்போது சேட்டு கடையில் நிற்கின்றனர். முதலில் இந்த திட்டத்திற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது பின்வாங்கி வருகின்றனர்.

காரணம், உதயநிதிக்காக நிதியெல்லாம் போச்சே என சோழ மண்டலத்தை சேர்நத் திமுக மாவட்ட செயலாளர் குமுறியுள்ளார். அவர் கூறியதாவது, 2020 ஆரம்பத்ததில் இருந்தே மூச்சு முட்டும் அளவிற்கு நிகர்ச்சிகைளை நடத்தினோம், தற்போது உதயநிதி பிரச்சார விளம்பரங்களை கொடுக்க சொல்லி தலைமையில் இருந்து போன் மேல போன் போட்டுக்கொண்டே இருப்பதாகவும், இதற்காக பல ஆயிரங்கள் செலழித்து விளம்பரம் செய்துள்ளதாகவும் புலம்பினார்.

உதயநிதி வாழ்த்து விளம்பரத்திற்காக மட்டும் சில கோடிகள் காணாமல் போனதாகவும், இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்த தலைமை உத்தரவிட்டுள்ளதாகவும், சொத்துகளை அடமானம் வைத்து செலவுகள் செய்வது அவசியம் தானா? என குமுறினார்.

எத்தனையோ வீட்டு பிரச்சனைகள் வந்தும் சொத்தை வைக்காமல் தற்போது பிரச்சாரத்திற்காக சொத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் இதையெல்லாம் பார்க்கும் போது மனசு வலிக்குது என்றார்.

சோழ மண்டலத்துக்கே இப்படி ஒரு கதியென்றால் நம் கதி அதோகதி தான் என கொங்கு, தொண்டை, பாண்டிய மண்டல நிர்வாகிகள் கதிகலங்கி போயிருக்கறார்களாம். பத்தாகுறைக்கு, இன்னும் அஞ்சு மாசம் அஞ்சு மாசம்தானு சொல்லி, ஆட்சியில் இல்லாதப்பவே அராஜகம் செய்தவால் மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

Views: - 17

0

0