சாதியை காரணம் காட்டி காதலர்களை பிரித்து வைத்த திமுக நிர்வாகிகள்.. பட்டியலின இளம்பெண் விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan11 September 2025, 1:29 pm
காஞ்சிபுரம் மாவட்டம் இடையா்பாக்கம் அடுத்த கோட்டூர் ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில்குமார் . இவருடைய மனைவி ஜோதிலட்சுமி , மகள் அனிஷா. இவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.
இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வந்த அனிஷா இடையில் கல்லூரிக்கு செல்லாமல் நின்று விட்டார்.
ஏகனாபுரம் அருகே உள்ள கண்ணன் தாங்கல் பகுதியை சேர்ந்த, மாற்று சமூகத்தை சேர்ந்த சஞ்சய் கண்ணன் அனுஷா ஆகிய இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வந்தள்ளனர்.
சஞ்சய் கண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அனிஷாவின் வீட்டுக்கு சென்ற சஞ்சய் கண்ணன் உங்கள் மகளை திருமணம் செய்து கொண்டு நான் இங்கேயே தங்கி விடுகின்றேன் எனக் கூறியுள்ளார்.
அனுஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்தனர். இந்நிலையில் சஞ்சய் கண்ணனின் பெற்றோர்கள் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகி, விசுவநாதனிடம் சென்று எங்களுடைய மகனை மீட்டுக் கொடுங்கள் என முறையிட்டுள்ளனர்.

கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான விஸ்வநாதன் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் ஆகியோர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்று, இரண்டு வாரம் அவகாசம் கொடுங்கள் இவர்களுக்கு திருமணத்தை செய்து வைக்கின்றோம் என நயவஞ்சகமாக கூறி சஞ்சய் கண்ணனை விசுவநாதன் அழைத்து சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது.
சஞ்சய் கண்ணன் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் என தன்னுடைய உறவினர் மூலமாக, கேள்விப்பட்ட அனுஷா கடந்த ஒன்பதாம் தேதி அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனிஷா சஞ்சய் கண்ணன் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி நாடகமாடிய திமுக கட்சியை சேர்ந்த கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் மற்றும் கண்ணன் தாங்கல் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விசுவநாதன் ஆகிய இருவர் தான் என்னுடைய மகள் சாவுக்கு காரணம் எனக்கூறி நீதி கிடைக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் , பிரேதபரிசோதனைக்கும் அனுமதிக்க மாட்டோம் என அனிஷாவின் பெற்றோர்களும் உறவினர்களும் கடந்த இரண்டு நாட்களாக போராடி வருகின்றனர்.

முதல் குற்ற அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் எஸ்சிஎஸ்டி ஆக்டில் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை இடையப்பாக்கம் கோட்டூர் ஜங்ஷனில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
