வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறுகிறது : பொன்விழா ஆண்டில் ஓபிஎஸ் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 12:35 pm
OPS - Updatenews360
Quick Share

சென்னை : திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக 50-ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியை ஏற்றி, இனிப்புகள் வழங்கி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டாடினர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக பொன்விழா சிறப்பு மலரை இபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட முன்னாள் அமைச்சர் பொன்னையன் பெற்றுக்கொண்டார்.

இதன்பின் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஓயாத உழைப்போம் என்று அனைவரும் சூளுரைப்போம் என்றும் போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது எனவும் தெரிவித்தார்.

Views: - 173

0

0