‘நாட்டிற்கு தொடர்ந்து சேவையாற்றுக‘ : பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!

17 September 2020, 12:46 pm
Stalin Wish Modi - updatenews360
Quick Share

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய பிரதமரின் பிறந்தநாளுக்கு உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், பிறந்தநாளை கொண்டாடும் மோடி நீண்ட நாட்கள் நலமுடனும், ஆரோக்யத்துடனும் வாழ வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிற்கு தொடர்ந்து தனது சேவையை செய்ய வேண்டும் என ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 7

0

0