ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர் : தட்டிக் கேட்ட பெண்ணின் தாலிக் கொடியை பறித்த கொடுமை.. ஷாக் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 1:21 pm

10 கோடி மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பதாகவு தட்டிக்கேட்ட பெண்ணின் தாலியை அறுத்து வீசியதாகவும் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் காந்தி. இவரது சகோதரர் சுப்பிரமணி. இவர்களுக்கு சொந்தமாக ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்நிலத்தை அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் என்பவர் அபகரித்து விட்டதாக காந்தி மற்றும் சுப்பிரமணி குடும்பத்தினர் வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில், ஊனை வாணியம்பாடி மதுரா, ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள எங்களது நிலத்தில் திமுக அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஜேசிபி மூலம் மண்ணை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.

இதை காந்தி மற்றும் சுப்பிரமணியின் மகன்கள், மகள்கள் தட்டி கேட்டுள்ளனர். அப்போது கவிதா என்ற பெண்ணின் தாலியை அறுத்து வீசியுள்ளார்.

மேலும் அங்கிருந்த ஆட்களை வைத்து தாக்கி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடியாட்களை வைத்து குடும்பத்தையே கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

எங்களது நிலத்தின் பட்டா மற்றும் வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புகார் மனு உடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அலுவலக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?