‘நண்பா என்ன கொன்னுரு’ : நண்பன் வைத்த கோரிக்கையை ஏற்று கொலை செய்த சக நண்பன்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 4:31 pm
Friend Murder - Updatenews360
Quick Share

தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் நண்பர்கள் மது அருந்தும் பொழுது தன்னை கொன்று விடுமாறு ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவர் அவர் தலையில் கல்லை போட்டு கொலை பரபரப்பு.

தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் தனது நண்பர் ஒருவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு சிப்காட் காவல் நிலையத்திற்கு ஒருவர் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் திருமணி என்பவரது மகன் மாரிமுத்து என்பதும் இறந்தவர் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியைச் சார்ந்த கொம்பையா மகன் பூல்பாண்டி என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் இன்று மதிய வேளையில் சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள பழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது பூல்பாண்டி தன்னை கொன்று விடுமாறு தனது நண்பர் மாரிமுத்துவிடம் தெரிவித்ததை தொடர்ந்து மது போதையில் இருந்த மாரிமுத்து பூல்பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த சிப்காட் போலீசார் அவரிடம் தொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 391

    1

    1