அனுமதியின்றி கூட்டம் கூடிய திமுகவினர் : மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!!

18 August 2020, 10:45 am
Cbe Case Against DMK - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் திமுக எம்எல்ஏ உட்பட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொற்றுநோய் தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாவட்ட செயலாளர்கள் அனுமதியின்றி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த தாகவும், விதிமீறி ஒன்று கூடியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளின் அடிப்படையில் கோவை வடக்கு-கோவை தெற்கு-கோவை கிழக்கு- கோவை மாநகர்  கிழக்கு-கோவை மாநகர் மேற்கு ஆகிய மாவட்டங்கள் செயல்படும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கோவை வடக்கு- சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு-தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு- எஸ்.சேனாதிபதி, கோவை  மாநகர் கிழக்கு- நா.கார்த்திக் எம்.எல்.ஏ., கோவை மாநகர் மேற்கு- பையா (எ) ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் நேற்று கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இவர்கள் அனுமதியின்றி ஒன்று கூடியதாகவும், இடைவெளிகளை பின்பற்றவில்லை எனவும் காட்டூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 269 மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகியவைகளின் கீழ் மாவட்ட செயலாளர்கள் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.