”வளையோசை கலகலகல” : திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து டூயட் பாடிய திமுக அமைச்சரின் மகன்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 10:00 pm

தமிழகத்தின் மூத்த அமைச்சர்களின் ஒருவரான ஐ. பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினரான செந்தில்குமார் அவரது மனைவி பெர்சி செந்தில்குமார் உடன் கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவரும் சென்று இருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் ஆர்கெஸ்ட்ராவுக்கு கச்சேரி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ஆர்கெஸ்ட்ரா-வை நடத்துபவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் சொந்த ஊரான வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர்.

உடனடியாக அவர் எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி மெர்சி செந்தில்குமாரை அன்பால் பாடல் பாடமேடைக்கு அழைத்துள்ளார்.

https://vimeo.com/840141920?share=copy

அப்போது இருவரும் சேர்ந்து மேடையில் வளையோசை கல கல கலவெனஎன புன்னகை மற்றும் ஆடலுடன் பாடிய காட்சிகளை எம்.எல்.ஏ செந்தில்குமாரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!