கோவை ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் வழங்குவதில் திமுக முறைகேடு : அராஜகத்தை கண்டித்து காளைகளின் உரிமையாளர்கள் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2022, 3:11 pm
Cbe Dmk Issue - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் திமுகவினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி காளைகளின் உரிமையாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு கோவையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் இந்த போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுக இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்த முடிவு செய்தது.

அதன்படி, கோவையில் வரும் 9ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் திமுகவினரின் தலையீடு இருப்பதாக பல நாட்களாக குற்றச்சாட்டு இருந்தது. இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் நுழைந்த திமுகவினர் தங்களது கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்து வந்த விவசாயிகள் கடுமையாக வேதனை அடைந்துள்ளனர்.

திமுக ஒன்றிய செயலாளர், நகர செயலாளர்களுக்குதான் டோக்கன் என்று கூறியதால் தமிழகத்தின் ஆத்திரமடைந்த காளைகளின் உரிமையாளர்கள் இன்று, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எல்&டி பைபாஸ் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டி கோவையில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்த பிரச்சினை எழுந்துள்ளதால் விவசாயிகள் கடுமையான மன உளைச்சல் அடைந்துள்னர்.

உடனடியாக இது குறித்து தீர்வு எடுக்கப் படாமல் இருந்தால் தமிழக அளவில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காளைகளின் உரிமையாளர்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Views: - 366

0

0