திமுக எம்.எல்.ஏ காரை உடைத்த மர்மநபர்கள் : பரபரப்பான சிசிடிவி காட்சி!!
21 September 2020, 3:46 pmதூத்துக்குடி : திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணணின் கார் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 20- ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் இவரது சொந்த கிராமமான தண்டபத்துவிலுள்ள அவரது வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது வாகனம் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அனிதா.ஆர் ராதாகிருஷ்ணன் வாகனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.