‘என்னை பார்த்து எப்படி அப்படி கேட்கலாம்‘ : உதவி ஆணையரிடம் திமுக எம்எல்ஏ வாக்குவாதம்!!

17 May 2021, 8:30 pm
Mla Ezhilan - Updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் கார் புறப்படும் நேரத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி உள்ளே வந்ததால் தடுத்து நிறுத்திய காவல் உதவி ஆணையரிடம் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின சந்தித்து பல்வேறு பிரமுகர்கள் கொரோனா நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிரமுகர்களை சந்தித்த ஸ்டாலின் பின்னர் தனது இல்லத்திற்கு புறப்பட தயாரானார்.

அப்போது முதலமைச்சரின் கான்வாய் அலர்ட் செய்யப்பட்ட நிலையில், திடீரென ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன், முதலமைச்சருக்கான பாதுகாப்பு நடைமுறைகளை மீறி உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது பாதுகாப்பு நடைமுறைகளை மீறி வர யாருக்கும் அனுமதி இல்லாததால், எம்எல்ஏ எழிலனை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் கொடி லிங்கம், தடுத்து நிறுத்தி உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த எழிலன், நான் யார் தெரியுமா என்று கேட்டபடி முதலமைச்சர் கார் அருகே சென்றார். பின்னர் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட பிறகு மீண்டும் எழிலன், காவலர்கள் இருக்கும் பகுதிக்கு வந்து யார் அது என்னை பார்த்து யார் நீ என கேட்டது என குரலை உசத்தினார்.

அதற்கு நான் தான் என கூறிய உதவி கமிஷ்னர் கொடிலிங்கத்திடம், எம்எல்ஏவான என்னை எப்படி யார் என கேட்கலாம், மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள் என கூறினார். அதற்கு உதவி கமிஷ்னர் தாங்கள் எம்எல்ஏ என தெரியாது என கூற, யார் யார் எம்எல்ஏ என்பதை தெரிந்து கொள்வதும் உங்கள் வேலை தான் என கூறிவிட்டு புறப்பட்டார்.

முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் தனது கடமையையே செய்ததாக உதவி ஆணையர் கொடிலிங்கம் பதிலளித்தார். ஆனால் இது குறித்து பேசிய எம்எல்ஏ எழிலன்,உதவி ஆணையர் ஒருமையில் பேசியதால் மரியாதையாக பேசுங்கன் என அறிவுறுத்தியதாகவும் மிரட்டவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்குதோ இல்லையோ திமுகவினர் அராஜகம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

Views: - 227

1

0