வாயை விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் திமுக எம்பி ஆ.ராசா : வ.உ.சி குறித்து சர்ச்சை பேச்சு.. போராட்டம் நடத்த முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 8:44 pm

வாயை விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் திமுக எம்பி ஆ.ராசா : வ.உ.சி குறித்து சர்ச்சை பேச்சு.. போராட்டம் நடத்த முடிவு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா கூட்டம் ஒன்றிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் குறித்து கருத்து வெளியிட்டார்.

இது வெள்ளாளர் சமுதாயத்திடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசா தேச விடுதலைக்காக பாடுபட்ட தியாகி சிதம்பரனார் பற்றி பேசியது தவறு என்று தெரிவித்து ஆங்காங்கே கூட்டங்கள் நடைபெற்றது.

பழனி அடிவாரம் பாளையம் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பழனி நகர, ஒன்றிய வேளாளர், வெள்ளாளர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் 13 சங்கங்களின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பேசிய ராசாவை கண்டித்து விரைவில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி வ.உ.சி. பேருந்து நிலையம் அருகே சிதம்பரனாரின் முழு உருவசிலை அமைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், ஆர்விஎஸ் மஹால் ஆனந்தன், அரிசி ஆலை சுப்பிரமணியன், ஆடலூர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?