நாக்கில் நரம்பில்லாமல் பேசிய திமுக : தன் வாயாலே கெடுத்துக் கொண்ட தயாநிதி மாறன்!!

20 September 2020, 12:47 pm
Dhayanithi Marna - Updatenews360
Quick Share

சென்னை : தமிழக தலைமை செயலாளரிடம் மனு அளிக்க சென்ற விவகாரத்தில் தயாநிதி மாறன் தாழ்த்தப்பட்டோரை கொச்சைப் படுத்திய விவகாரத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழகத்தில் பல வருடம் ஆட்சிபுரிந்த திமுக சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக மும்மொழி கொள்கை, தாழ்த்தப்பட்டோர் விவகாரம் தொடர்பாக தவறாக பேசி வருகிறது. மேலும் திமுக நிர்வாகிகள் மீதான குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களை சந்திக்க திமுக எம்பிக்கள், தயாநிதி மாறன், டி.ஆர் பாலு உள்ளிட்டோர் கடந்த 13ஆம் தேதி தலைமை செயலகத்திற்கு சென்றனர். திமுகவின் ஒன்றிணைவோம் வா மூலமாக அரசு உதவி கோரும் ஒரு லட்சம் மக்கள் சமர்பித்த கொரோனா நிவாரண மனுக்களை ஒப்படைத்தனர்.

அப்போது தங்களின் மனுக்கள் பற்றி செவி சாய்க்காமல் தலைமைச் செயலாளர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் , தங்களை அலட்சியப்படுத்தியதாக திமுக எம்பிக்கள் புகார் கூறினர்.

தலைமைச் செயலாளர் தங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதற்காக மன்னிப்பு கேட்ட வேண்டும், இல்லையென்றால் இந்த பிரச்சனையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்து சென்று புகாரளிக்கப்படும் என கூறினர்.

இந்த நிலையில் தயாநிதி மாறன் பேட்டிஅளித்த போது, முன்னாள் மத்திய அமைச்சர்களாக இருந்த எங்களை கண்ணியக்குறைவாக நடத்த நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா என கொதித்தெழுந்து பேசினார். இந்த வார்த்தையை கேட்ட திமுக மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கோபத்தில் வரம்பை மீறி தயாநிதி பேசியதால் ஸ்டாலினை கலங்கடித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், தயாநிதி கூறிய வார்த்தையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து ஒரு சில மணி நேரத்தில் தயாநிதி மாறன் மன்னிப்பு கோரி ட்வீட் செய்திருந்தார்.

தலைமைச் செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மன்றாடிய திமுகவினர், தவளை போல தனது வாயாலே கெடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் திமுகவினரையே மன்னிப்பு கேட்க வைத்துவிட்டது என திமுகவை எதிர்ப்பவர்கள் சிலாகித்துள்ளனர்.

Views: - 1

0

0