மின்சார முறைகேட்டில் ஈடுபட்ட திமுக பிரமுகர் : அபராதம் கட்ட மறுப்பு.. விஜிலென்ஸ் அதிகாரிகள் எடுத்த முடிவு!

17 July 2021, 8:46 am
Dmk Executive- Updatenews360
Quick Share

கோவை : மின்சார முறைகேட்டில் ஈடுபட்ட கோவை சுகுணாபுரம் திமுக பிரமுகர் குடோனில் மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

கோவை சுகுணாபுரத்தை சேர்ந்தவர் திமுக பகுதிகழக செயலாளராக உள்ள மு.ராஜேந்திரன். இவர் பிஸ்கெட் உட்பட உணவு பொருட்களை விற்பனை செய்யும் வினியோகஸ்தராக உள்ளார்.

இந்த பொருட்களை இருப்பு வைக்க வீட்டிற்கு அருகிலும், கோவைபுதூர் செல்லும் வழியில் வசந்தம் நகர் பகுதியில் வாடகைக்கும் குடோன் எடுத்து பயன்படுத்தி வருகிறார்.

இந்த குடோனுக்கு முறைகேடாக மின்சாரத்தை திருடி பயன்படுத்தி வருவதாக வந்த ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து திடீரென மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரிகள் திமுகவை சேர்ந்த ராஜேந்திரனின் குடோனில் சோதனை நடத்தினர்.

சோதனையில் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியது உறுதிபடுத்தியதை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட ராஜேந்திரனுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

ராஜேந்திரன் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் அதிகாரிகளிடம் அவ்வளவு தொகையெல்லாம் கட்டமுடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் 15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர்.

ஆனால் அளும்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி 12 ஆயிரம் மட்டுமே அபராதமாக செலுத்தியதாக தெரியவருகிறது. திமுக பிரமுகரின் இந்த முறைகேடு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 137

0

0