திமுக பிரமுகர் வெட்டிக்கொலை…மர்மநபர்கள் வெறிச்செயல்: கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
7 December 2021, 9:23 am
Quick Share

கன்னியாகுமரி: குளச்சல் அருகே திமுக பிரமுகர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் திமுக பிரமுகராக உள்ளார். இந்நிலையில் இவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குளைச்சல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்மநபர்களால் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 299

0

0