‘கழுத்தை அறுத்து விடுவேன்’.. அதிமுக இளம் நிர்வாகியை தாக்கிய திமுக பேரூராட்சி தலைவர்… கணவருடன் சேர்ந்து அராஜகம்..!!

Author: Babu Lakshmanan
2 September 2023, 12:57 pm

அரசியல் விரோதம் காரணமாக எரியோடு திமுக பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன் தாக்கியதில் இளைஞர் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அதிமுக நகர பொருளராக இருப்பவர் குணசேகரன். இவரது மனைவி வாசுகி. இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் உள்ளார். மகேஸ்வரன் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். இவர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறையிலும் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

அதிமுகவின் வரலாறு சாதனைகள் என பல்வேறு விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத எரியோடு திமுக பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி மற்றும் அவரது கணவர் கார்த்திகேயன், அடிக்கடி அவரிடம் பிரச்சனை செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், மகேஸ்வரன் வீட்டில் இருந்தபோது பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் இருவரும் அவருடைய வீட்டிற்கு சென்று, அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற அவரது தந்தையையும், தாயையும் தாக்கியுள்ளார்கள்.

மேலும், பதவி எனக்கு ஒரு விஷயம் கிடையாது, நாளை காலையில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வீடு புகுந்து கழுத்து அறுத்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளதாக மகேஸ்வரன் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார். படுகாயம் அடைந்த மகேஸ்வரன் எரியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு எரியோடு பகுதிகளில் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் எரியோடு பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என இப்பகுதி மக்களே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!