தமிழக வாழ்வுரிமை, ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு சீட்..!! திமுக மீது கொ.ம.தே.க. அதிருப்தி..!!!

8 March 2021, 9:14 pm
DMK - velmurugan - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை, ஆதித் தமிழர் பேரவை கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டது. தேமுதிகவிடம் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் ஆதித் தமிழர் பேரவை கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்றும், திமுக ஒதுக்கும் தொகுதிகள் தொடர்பாக கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் பேசி முடிவெடுக்கப்படும என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Views: - 1

0

0