தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் : தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு பொறுப்பு!!

Author: Babu
1 October 2020, 2:28 pm
AnnaArivalayam
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேனி மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்தும் விதமாகவும், நிர்வாக வசதிக்காகவும், அம்மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கம்பம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கிய தேனி தெற்கு மாவட்டத்திற்கு என். ராமகிருஷ்ணனும், போடி நாயக்கனூர், பெரியகுளம் (தனி) தொகுதிகளை உள்ளடக்கிய தேனி வடக்கு மாவட்டத்திற்கு தங்க தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல, திமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்புகளை திமுகவின் பொதுச்செயலாளராக அண்மையில் பொறுப்பேற்ற துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Views: - 41

0

0