கொரோனா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி…! அப்படியே திணறி போய் மழுப்பிய உதயநிதி…!

6 August 2020, 12:28 pm
Udayanidhi Stalin in 4 sections - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய பதிலடியால் திணறி போயிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்தாலும், அதற்கான சுகாதார நடவடிக்கைகளில் மும்முரமாக தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் அவர் கூறி இருந்ததாவது:  

இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் இதனை விஜயபாஸ்கர் மறுத்து பதிலளித்து இருந்தார். ஆனால் அதற்கு பதிலடி தருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், சப்பைக்கட்டு கட்டி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் உதயநிதி.

அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர் பலியாவதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். அச்செய்தி பொய்யாக இருக்கவே நானும் விரும்புகிறேன். எனினும் கொரோனா பணியில் உயிர்த்தியாகம் செய்த அரசு – தனியார் மருத்துவர் – செவிலியர் உள்ளிட்ட முன்கள வீரர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

மற்றொரு பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:  அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான நிவாரணதொகை உரியமுறையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிவிக்கவேண்டும். சுகாதாரத்துறையினர் நம்பிக்கையுடன் பணியாற்ற இந்த வெளிப்படைத்தன்மை அவசியம். கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களின் நலனில் கழகமும் இளைஞரணியும் என்றும் அக்கறையுடன் செயல்படும் என்று கூறி உள்ளார்.

Views: - 28

0

0