அதிமுக பிரச்சாரத்தில் ஒலித்த திமுக குரல் : புட்டு புட்டு வைத்த முல்லை வேந்தன்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2021, 4:11 pm
Mullai Vendhan -Updatenews360
Quick Share

அதிமுகவில் இணைந்து திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவை பற்றி புட்டு புட்டு வைத்த சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22ஆம் தேதி திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தருமபுரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் 24ஆம் தேதி நீண்ட இடைவெளிக்கு பின் அரசியல் மேடையில் முல்லை வேந்தன் பேசினார். அப்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், சாதாரண விவசாயி இன்று கோட்டையில் இருப்பதை ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது நாகரீகமான செயலா என்றும் கேள்வி எழுப்பினார். செல்வகணபதி, செந்தில் பாலாஜி போன்றவர்களை கேவலடமாக பேசிய திமுக, தற்போது திமுகவில் இணைந்ததும் புத்தனாகி விட்டார்கள் என விமர்சித்தார்.

முதலமைச்சர் 8 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்த ஸ்டாலின் தற்போது அரூர் – தருமபுரி இடையே 4 வழிச்சாலை அமைப்பேன் என்கிறார். வெகு நாள் கழித்து முல்லை வேந்தன் பேசினாலும், திமுகவுக்கு எதிராக பேசியது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 119

0

0