2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்காது : ஹெச்.ராஜா கணிப்பு!!

Author: Udayachandran
8 October 2020, 3:21 pm
Madurai H Raja- updatenews360
Quick Share

மதுரை : திமுக மூழ்கும் கப்பலாகவே உள்ளதால் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை பாண்டிகோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “பாஜகவில் நவம்பர் மாதத்திற்கு உள்ளாக பூத் அளவில் கட்டமைக்க நடவடிக்கைகள், அதிமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ வே திமுகவுக்கு ஆதரவாக இல்லை, திமுகவினர் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர் என கூறினார்.

இதனால் திமுக கதிகலங்கியுள்ளது என கூறிய அவர், ஆடு ரெண்டு முட்டி கொண்டால் நரிகளுக்கு சந்தோஷம், அதிமுக தலைமை பிரச்சினைகளை சுமூகமாக பேசி முடித்து கையாண்டு உள்ளனர். முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறினார்.

திமுக மூழ்கும் கப்பலாக மாறி வருகிறது, 2021 ல் திமுக ஆட்சி அமைக்க முடியாது, தமிழக தேர்தல் கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை மட்டுமே அறிவிக்கும். ஒரு பிரச்சினையில் ஆளும் கட்சி நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தலாம், உ.பி யில் எதிர்கட்சிகள் அரசியல் நாடகம் ஆடும் யுக்தி” என கூறினார்.

ஆனால் பொன்.ராதாகிருஷ்ணணின் கருத்து தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ஹெச்.ராஜா பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Views: - 61

0

0