அலேக்காக நகையை திருடிய திமுக பெண் நிர்வாகி : முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நூதன திருட்டு.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 11:10 am
DMK Executive - Updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொலை, கொள்ளை பெண்கள் மற்றும் குழந்தைகளக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிற்னர்.

அது மட்டுமில்லாமல், பள்ளிக் குழந்தைகளும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அதில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக பலர் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

இப்படி குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்காததே காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஆளுங்கட்சி பெண் நிர்வாகியே நகைக்கடையில் நகையை அலேக்காக திருடிய சிசிடிவ காட்சி வெளியாகி பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் திமுக நகரச் செயலாளர் ராஜன் அவர்களின் மனைவியும் அங்கமங்கலம் ஊராட்சி திமுக வார்டு செயலாளருமான தேவி என்பவர் ஏரல் நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் நகை திருடிய காட்சி பதிவாகியுள்ளது.

அதில் தான் கொண்டு வந்த கவரிங் நகைகயை, கடை ஊழியரை திசைத்திருப்பி தங்க நகையை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்க நகையில் உள்ள TAGஐ கவரிங் நகையுடன் கட்டி வைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 266

0

0