கோவிலுக்கு செருப்புடன் சென்ற திமுகவினர் : இந்து அறநிலையத்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 2:20 pm

வேலூர் : கோவிலுக்குள் காலணி அணிந்து சென்ற திமுகவினரை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் திமுகவினர் பலர் காலணிகளோடு கோவிலுக்குள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்காத அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும், கோவிலில் இருந்து அறநிலைய துறை வெளியேற வேண்டும், செல்லியம்மன் கோவிலின் EO பதவி நீக்க வேண்டும் என கோரி செல்லியம்மன் கோவில் முன்பு 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னனியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்பாட்டத்துக்கு பிறகு கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்ற போது செயல் அலுவலர் இல்லாததால் இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் இந்து முன்னனியினர் ஈடுபட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!