யாசகம் செய்து 10 ஆயிரம் ரூபாயை இலங்கை தமிழர்க நிதிக்கு வழங்கிய யாசகர்.. கொரோனா நிதியை தொடர்ந்து யாசகரின் அடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2022, 2:07 pm
10 k Beggar - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வீதி வீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் ஊர் ஊராக சென்று கோவில்களில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதற்கிடையே கடந்த வாரம் திண்டுக்கல் வந்த பூல் பாண்டியன் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் யாசகம் எடுத்ததில் ரூபாய் 10,000 கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பாண்டியன் தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்திருந்த ரூபாய் 10 ஆயிரத்தை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகனிடம் வழங்கினார்.

இவர் ஏற்கனவே கொரோனா நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 7 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 338

0

0