கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு : அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்ட திமுகவினர்: கோவையில் பரபரப்பு..!!

Author: Rajesh
30 January 2022, 11:38 am
Quick Share

கோவை: கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பிய போது, திமுகவினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட காத்திருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அமைச்சரின் வாகனம் செல்லும் முன்பாக கூடிய திமுகவினர் திமுக கட்சியினருக்கு அப்பகுதியில் சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட்டு வழங்கியதை கண்டித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர் இதையடுத்து பதில் ஏதும் சொல்லமல் அமைச்சர் வாகனத்தில் சட்டென்று புறப்பட்டுச் சென்றார்.

தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவினரை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Views: - 1313

0

0