கெட்ட கெட்ட வார்த்தைகளால் இளைஞரை திட்டிய செர்ணாக்கா : பைக்கை சீஸ் செய்ய வந்த ஊழியர்களை வசை பாடிய பெண்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 10:52 am

பார்ப்பதற்கு சினிமாவில் வரும் சொர்ணாக்கா போல காட்சி தரும் இவர் தான் இருசக்கர வாகனத்தை சீசிங் செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களை ஆபாசமாக வசைபாடிய வேடசந்தூர் சுனாமி சுதா.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியில் வசித்து வருபவர் சுதா. தனியார் நிதிநிறுவனத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு கடன் பெற்று வாகனம் வாங்கிய நிலையில் மாதாந்திர தொகை பல மாதங்கள் சரியாக செலுத்தி வந்துள்ளார்.

ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பணம் செலத்த தாமதமாகியுள்ளது. பல மாதங்கள் ஆகியும் மாதம்தோறும் கடன் தவணையை கட்டாததால் இன்று அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.

அந்தப் பெண்ணிடம் தங்களது இரு சக்கர வாகனத்தின் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க என்று கூறியுள்ளனர். அவர் தனது வீட்டிற்குள் சென்று ஆவணங்களை எடுத்து வருவதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர்.

ஒரு இளைஞர் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட மற்றொரு இளைஞர் அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே அவரை பிடித்து நீங்கள் யார் எதற்காக இரு சக்கர வாகனத்தை திருடி சென்றீர்கள் என்று கேட்டபோது சில மாதங்களாக மாதத் தவணை கட்ட தவறியதாகவும் நிறுவனத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வரக் கூறினார்கள் என்றும் அதனால்தான் எடுத்துச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார்

உங்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அந்தப்பெண் கூறியுள்ளார். அதற்கு நான் இந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து உள்ளேன் ஆகையால் என்னிடம் அடையாளம் அட்டை இல்லை எனவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்தப் பெண் நீ யார் என்று எனக்கு தெரியாது எப்படி என் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி வசை பாடினார்

சாலை என்று கூட பாராமல் அந்த இளைஞரை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசிய அந்தப் பெண், இளைஞரின் கைப்பேசியை பிடுங்கி வைத்துக் கொண்டார்.

பின்பு அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள் அந்த இளைஞரை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு சென்ற அவர்கள் இவனை விடக்கூடாது என்று கூறிக் கொண்டே வாடா எங்க வீட்டுக்கு என்று அழைத்து சென்றனர்.

மேலும் சாலையின் நடுவே ஒரு இளைஞரை ஆபாச வார்த்தைகளால் பேசியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒருபெண் சண்டையிட்டது அப்பகுதியில் சென்ற பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 2667

    0

    0