போலி நகைகளை அடகு வைத்து ரூ.32 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்..!!
Author: Rajesh30 January 2022, 9:12 am
கோவை: காந்திபுரம் பகுதியில் லட்சுமி விலாஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் போலி நகைகளை வாடிக்கையாளர்கள் மூலம் மோசடி செய்து, ரூ.32 லட்சம் வரை கையாடல் செய்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நகை மதிப்பீட்டாளரை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காந்திபுரம் லட்சுமி விலாஸ் வங்கி தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் நபரான ஜெயசங்கர் வேலை செய்து வந்தார். இவர், வங்கியின் வாடிக்கையாளர்களிடம், தன் வங்கியில் வேலை செய்வதால், தன் குடும்பத்தாரின் நகையை தானே அடகு வைக்க முடியாது என்று தெரிவித்து, நகைகளை தனக்கு அடமான வைக்க உதவுமாறு கேட்டுக் வந்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு உதவ முன் வந்த வாடிக்கையாளர்களிடம், போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளார். இவர் செய்து வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்த நிலையில், வங்கி சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் ஜெயசங்கரை கைது செய்தனர்.
போலி நகைகளை அடமானம் வைத்து, தங்க நகை மதிப்பீட்டாளரே மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0