திமுகவின் 100 நாள் ஆட்சி.. சாதனை அல்ல வேதனை : அர்ஜுன் சம்பத் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 3:12 pm
arjun Sampath - Updatenews360
Quick Share

திருப்பூர் : திமுகவின் 100 நாள் ஆட்சி வேதனையாக அமைந்ததே தவிர சாதனை அல்ல என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உள்ள குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் குமரன் உயிரிழந்த இடத்தில் உள்ள நினைவுதூணை சுற்றிலும் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைப்பதாகவும் , திமுகவின் 100 நாள் சாதனை நூற்றாண்டு சாதனையாக விளம்பரம் செய்து கொண்டிருப்பதாகவும் ஆனால் 100 நாட்கள் வேதனையாக அமைந்ததே தவிர சாதனை அல்ல எனவும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்திருப்பதாகவும் இதில் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழில் வழிபாடு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் தற்போது விளம்பரத்திற்காக திமுக இதனை புதிய முயற்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இருப்பினும் இவற்றை இந்து மக்கள் கட்சி வரவேற்பதாகவும் , பிரதமர் மோடி பதவியேற்ற பின்பு தான் சுதந்திர தினத்திற்கும் , தேசியக் கொடிக்கும் முழு மரியாதை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 415

0

0