“திமுகவின் குடும்பமே ப்ளே பாய் குடும்பம்” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்…!

12 August 2020, 1:31 pm
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முடிவெடுப்பார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் இபிஎஸ், ஓபிஎஸ்-சை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை, பாரிமுனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கருத்து சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் கூறுவது கட்சியின் கருத்து அல்ல எனவும் தெரிவித்தார்.

கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என குறிப்பிட்ட ஜெயக்குமார், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது கூறுவது ஆரோக்கியமான கருத்தாக இருக்காது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, அது குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக – பாஜக கூட்டணி தொடருமான என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். மேலும், நான் ஜாக்லேட் பாய் என்று கூறியதற்கு உதயநிதி என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார் எனவும், திமுகவின் குடும்பமே ப்ளே பாய் குடும்பம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Views: - 3

0

0