“போஸ்டர் அடிக்காதீங்க“ : ரசிகர்களுக்கு ரஜினி ADVICE!!

10 September 2020, 5:08 pm
Rajini Advice - updatenews360
Quick Share

சென்னை : தலைமையிடம் இருந்து உத்தரவு வரை தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்குள் குதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் ரஜினி தற்போது வரை அரசியலுக்குள் குதிப்பதை எந்த எண்ணங்களையும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால் அவரது ரசிகர்கள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சமீபத்தில கோவை, மதுரை, ராமநாதபுரம், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போ இல்லை என்றால் எப்பவும் இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

இதையடுத்து போஸ்டர்கள் வைரலானதால் பெரும் பரபரப்பும், பேச்சு பொருளாகவும் மாறியது. இந்த நிலையில் தலைமை நிர்வாகி சுதாகர், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்களை அடிக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாகவும், தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 6

0

0