‘கொரோனா தடுப்பூசி வதந்திகளை நம்ப வேண்டாம்’: சுகாதாரத்துறை செயலாளர்..!!

15 January 2021, 8:25 am
Quick Share

விழுப்புரம்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்புசி தடுப்பூசி போடும் அறை, காத்திருப்பு அறை, வெளியேறும் பகுதி, கண்காணிப்பு அறைகள் ஆகியவைகளை சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

தமிழகத்தில் ஜன.16ம் தேதி முதல் 166 மையங்களில் இந்த தடுப்பூசி போடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. முழுமையாக பாதுகாக்கப்பட்டு, முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என ஜனவரி 25-ஆம் தேதி வரை பதிவு செய்தவர்களுக்கு இந்த தடுப்பூசியானது போடப்படும். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறினார்.

உருமாறிய கொரோனாவால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், இதுவரை தமிழகத்தில் நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் தற்போது குணமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0