“அம்மாடியோவ், இனி மல்லிப்பூ வாங்க முடியாது போல“ ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை தெரியுமா?

23 January 2021, 1:56 pm
Jasmine Rate - Updatenews360
Quick Share

ஈரோடு : அண்டை மாநிலங்களில் நடைபெறும் திருமண விஷேசம் காரணமாக் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்ததுள்ளது. இதன் காரணமாகவும் அண்டை மாநிலங்களில் நடைபெறும் திருமண விஷேசம் காரணமாகவும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்து மல்லிகைப்பூ கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ 3500 ரூபாய்க்கும், முல்லை கிலோ 1600 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 750 ரூபாய்க்கும், செண்டு கிலோ 110 ரூபாய்க்கும், ஜாதி முல்லை கிலோ 750 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 5

0

0