குழந்தை இறந்து பிறந்ததாக கூறிய மருத்துவர்கள் : மயானத்தில் உயிர்த்தெழுந்ததால் அதிர்ச்சி…அரசு மருத்துவமனையின் அவலநிலை!!

4 July 2021, 1:42 pm
Infant Dead and Survive 1- Updatenews360
Quick Share

தேனி : குழந்தை இறந்து பிறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் மயானத்தில் குழந்தை உயிருடன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி தாசில்தார் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிலவேந்திரன் ராஜா. அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்படவே, தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி மருத்துவர்கள் இறந்த குழந்தையின் உடலை பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் கிறிஸ்த்துவ மயானத்திற்கு கொண்டு சென்று புதைப்பதற்கு முன்பு பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குழந்தையை மீண்டும் எடுத்து கொண்டு தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பெற்றோர் சென்றுள்ளனர். இதனால் உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக மருத்துவர்கள் கூறியதால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.

Views: - 216

0

0