கர்ப்பிணி வார்டில் ஜாலியாக தூங்கும் நாய்கள் : அரசு மருத்துவமனையின் அவலம்… செவி சாய்க்காத நிர்வாகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 December 2021, 7:07 pm
Tirupathur GH Dog - Updatenews360
Quick Share

வேலூர் : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்கள் பிரிவில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாயால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை கால்வாய்களை தூர் வாருவது இல்லை இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே தொடர்ந்து எழுந்துவருகின்றன.

சுகாதாரம் சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் எடுப்பதில்லை என்கிற நிலையில், தற்பொழுது அரசு மருத்துவமனையின் கர்ப்பிணி பெண்கள் பிரிவில் நாயொன்று சுதந்திரமாக சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கர்ப்பிணி பெண்கள் பிரிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் கர்ப்பிணி பெண்களுடன் உதவிக்கு கூடவரும் முதியோர்கள் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் அது நல்ல நிலையில் உள்ள நாயா அல்லது வெறி நாயா போன்ற கேள்விகளை சுமந்துகொண்டு அச்சத்துடன் கூடவே அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் மக்கள் இருப்பார்கள்.

முன்பு தான் சாதாரண மருத்துவமனையாக இருந்தது தற்பொழுது மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாறிய பின்பும் இது போன்ற அஜாக்கிரதையாகன போக்கை கைவிட்டு பொதுமக்களுக்கு மன உளைச்சல்கள் இல்லாதவாறு திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என்று கூறினர்.

Views: - 586

0

0