கோவளம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் : ஆபத்து காத்திருப்பதாக மீனவர்கள் அச்சம்…

Author: kavin kumar
23 January 2022, 11:49 pm
Quick Share

கன்னியாகுமரி : கோவளம் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது.

கன்னியாகுமரி அடுத்துள்ள கோவளம் கடற்கரையில் நேற்று மாலை திடீரென சுமார் 300க்கும் மேற்பட்ட டால்பின் மீன்கள் கடற்கரையில் சுற்றி திரிந்தனர். இதனையடுத்து இந்த டால்பின் மீன்களை காண ஏராளமான மீனவர்கள் கடற்கரைக்கு வந்தனர். இந்நிலையில் ஒரு டால்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கியது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள் தங்கள் வள்ளத்தில் அந்த, டால்பினை ஏற்றி மீண்டும் கடலின் உள்ளே கொண்டு விட்டனர் .ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த டால்பின் சுமார் 200கிலோ எடையும், 7 அடி நீளம் கொண்டதாக இருந்தது.

பின்னர் இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் டால்பினை மீட்டு உடற்கூறு ஆய்வு எடுத்து சென்றனர். டால்பின் மீன் இறந்தது குறித்து கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் என்ற மீனவர் கூறியதாவது; டால்பின் மீன் இறந்து கரை ஒதுங்கியது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு ஆபத்து காத்திருப்பது போன்று தெரிகிறது. பொதுவாக டால்பின் மீன்கள் கூட்டமாக வாழ்கின்றது .ஆழ்கடலில் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருருப்பதால் இந்த டால்பின் இன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பொதுவாக டால்பின் மீன்கள் தங்கள் இனத்துடன் கூடிய மீன்களுக்கு ஆபத்து வரும்போது அதை விட்டு விட்டு செல்லாது.

அதேபோன்று ஆழ்கடலில் நீந்த முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது டால்பின் மீன்கள் கண்ணீர் விட்டு அழ தொடங்கிவிடும். இதை பார்த்த மற்ற டால்பின்கள் உயிருக்கு போராடும் டால்பினை எப்படியாவது மீட்டு விடலாம் என முயற்சி செய்து லேசாக தள்ளி தள்ளி ஆழ்கடலுக்குள் கொண்டு சொல்ல முயற்ச்சி செய்து கடைசியில் கரை வரை வந்துவிடுகிறது. டால்பின் மீன் பறவை இனத்தில் காகம் போன்றது .ஒன்று இருந்தாலும் கூட மற்றவை கூட்டமாக சுற்றி நின்று அனுதாபத்தை தெரிவிக்கும் .இவ்வாறு அவர் கூறினார்

Views: - 1642

0

0