“டான்” படத்தின் ட்ரைலர் மற்றும் முன் வெளியீட்டு விழா.. பிரமாண்டமாக நாளை நடைபெறும் என அறிவிப்பு..!

Author: Rajesh
5 May 2022, 2:30 pm
Quick Share

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

டான் படத்திற்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
டான் படத்தின் முன் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் ட்ரைலர் திரையிடப்படும் அதே நேரம் யூடியூப்பிலும் வெளியாக இருக்கிறது.
டான் திரைப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளது. டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

Views: - 548

0

0