அரசியலை பற்றி கேள்வி எதுவும் கேட்காதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்ட அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 12:30 pm

அரசியலை பற்றி கேள்வி எதுவும் கேட்காதீங்க… செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்ட அண்ணாமலை!!

பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 165 ஏக்கர் பரப்பளவிலான குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்வாகி உள்ளது.

இதையடுத்து இந்த குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட பா.ஜ.கவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டும், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

அதன்படி இன்று கோவையில் நான் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டேன். இதே போன்று அனைவரும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் தூய்மை செய்வதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். இதன் மூலம் விளம்பரம் தேடுவதாக நினைத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கும் இதுபோன்று தூய்மை பணியில் ஈடுபட உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.

தூய்மை பணியை முடித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் கதர் விற்பனை நிலையத்திற்கு சென்று ஏதாவது ஒரு கதர் பொருளை வாங்க வேண்டும்.

தொடர்ந்து அண்ணாமலையிடம் நிருபர்கள், இன்றைய டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் இங்கு அரசியல் வேண்டாம் என தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?