9 பேரின் உயிரை பறித்த சுற்றுலா…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2023, 1:14 pm
Ma Subramanian - UPdatenews360
Quick Share

9 பேரை உயிரை பறித்த சுற்றுலா…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!!

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் இருந்து தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி பகுதிகளுக்கு 54 பேர், தனியார் சுற்றுலா அமைப்பின் ஏற்பாட்டின் பெயரில் சுற்றுலா சென்று இருந்தனர்.

அந்த பேருந்தானது நேற்று மாலை குன்னூர் மரப்பாலம் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது விபத்துக்குள்ளானது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சுற்றுலா முடித்து மருதமலைக்கு செல்ல அந்த பாதையில் வந்துள்ளனர். அப்போது குன்னூர் மரப்பாலம் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கும், மேல் சிகிச்சைக்காக உதகை, கோவை மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்து நடந்த குன்னூர் மரப்பாலம் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். விபத்து எவ்வாறு நடந்தது என்பது பற்றி அதிகாரியிடம் விசாரித்து தெரிந்துகொண்டார். பின்னர் சிகிச்சை பெற்று வருவோர்களை சந்திக்க குன்னூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கு விபத்தில் பலியாகி உயிரிழந்த 9 பேரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விபத்து குறித்தும், உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

தற்போது வரையில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 30 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறிதளவு காயம் அல்லது காயம் இல்லாதவர்கள் 10 பேர் குன்னூர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Views: - 392

0

0