அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2024, 4:59 pm
அண்ணாமலை சொல்றது எல்லாம் கண்டுக்காம இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டிருங்க : அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சனம்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கர்த்தநாதபுரம் பகுதியில் பாமணி ஆற்றின் குறுக்கே 3.79 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தொடங்கி வைத்தார். பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வருகை தந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு பொதுமக்கள் மலாகள் வீசி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கூறியதாவது, திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்லாமல் மன்னார்குடியில் தொடர்ந்து மின்னி வருகிறது, மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கர்த்தநாதபுரம் பாலம் பல ஆண்டுகால கோரிக்கை, பத்து ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று, பாலம் கட்ட இங்கு உள்ள 64 வீடுகள் இடித்து கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த போது, அதனை தவிர்த்து சரியான முறையில் திட்டமிடப்பட்டு இரு வழி சாலையை ரூ 3 கோடி 79 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடியில் இந்த பாலம் அமைகிறது. இந்திய கூட்டணி மட்டும்தான் தற்போது வலுவாக உள்ளது.
எதிரணியில் கதவு ஜன்னல் திறந்து வைத்தும் யாரும் கூட்டணிக்கு போகவில்லை, காற்று தான் வருகிறது, மக்கள் ஒரு முடிவில் இருக்கும் போது தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் போது, இவி மிஷின் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அதனை சரி செய்ய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் 39 இடங்களும் பாண்டிச்சேரியில் ஒரு இடமும் சேர்த்து 40 இடங்களில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
ரோட்டில் சிறு குழந்தை விளையாடும் போது கடந்து செல்வது போல் பாஜக அண்ணாமலை போன்றோர் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்வதை கடந்து செல்ல வேண்டும், நமக்கு மக்கள் பணி, தமிழக வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியை உலக தரத்திற்கு கொண்டு செல்வதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
தஞ்சையில் அற்புதமான சிப்காட் அமையவிருக்கிறது, திருவாரூரில் சிறிய அளவிலான தொழில் பூங்கா அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
0