ஆளுநர் வேலையை மட்டும் பாருங்க.. பாஜக செய்தி தொடர்பாளர் வேலையை பாக்காதீங்க.. தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 3:44 pm

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது என குற்றம் சாட்டினார்.

மேலும், தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

தமிழசையின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பதில் கூறியுள்ளார். தமிழிசை அவர்களின் பணி பாண்டிச்சேரி (புதுச்சேரி) ஆளுநர் பொறுப்பு ஆகும். அதனை அவர்கள் செய்தாலே போதும். மாறாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் போல செயல்பட்டு வருகிறார். ஒருவேளை இவ்வாறு செயல்பட்டால் அடுத்த முறை மீண்டும் பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என எண்ணுகிறாரா தெரியவில்லை.

மீண்டும் அவர் பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிட்டால் ஏற்கனவே கொடுத்தது போல மக்கள் தோல்வியை தான் பரிசாக அளிப்பார்கள். அதனால் அவர்கள் பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்ப்பது நல்லது என அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!